செம்பியன் கண்டியூர்

    அமைவிடம் - செம்பியன் கண்டியூர்
    ஊர் - செம்பியன் கண்டியூர்
    வட்டம் - மயிலாடுதுறை
    மாவட்டம் - நாகப்பட்டினம்
    வகை - கைக்கோடரி
    கிடைத்த தொல்பொருட்கள் - கைக்கோடரிகள், உடைந்த சுடுமண் கைப்பிடி, இரும்பு ளையம், இரும்பு ஆணி, பானையோடுகளால் செய்த வட்டுக்கள், ஸ்வஸ்திகா, உடுக்கை, முக்கோண வடிவம், இரண்டு முக்கோணங்கள் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டுள்ளது போன்ற குறியீடுகள் கீறப்பட்ட பானையோடுகள், கருப்பு மற்றும் கருப்பு சிவப்பு வழவழப்பான பானை ஓடுகள், முதுமக்கள் தாழிகள், உருண்டையான பானை, கும்ப அமைப்பில் குவிந்த பானை, அகலமான தொட்டி அமைப்பில் பானை, தட்டு, குடுவை, குவளை, கிண்ணம், கால்கள் கொண்ட ஜாடி, ஒரு உடைந்த புதிய கற்காலக் கைக்கோடாரி
    பண்பாட்டுக் காலம் - புதிய கற்காலம்
    கண்டறியப்பட்ட காலம் - 2006
    கண்டறிந்த நிறுவனம்/நபர் -

    தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை

    விளக்கம் -

    செம்பியன்கண்டியூர் ஒரு புதிய கற்காலப்பகுதி வாழ்விடமாகும். இங்கு மேற்பரப்பாய்வில் கிடைத்த இரண்டு கைக்கோடரிகளுள் ஒன்றில் எழுத்துப் பொறிப்புகள் காணப்படுகின்றன. செம்பியன் கண்டியூரி்ல் அகழாய்வுக் குழியில் உடைந்த நிலையில் ஒரு புதிய கற்காலக் கைக்கோடரி கிடைத்துள்ளது. மேலும் அதிகளவிலான இரும்பு பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் சுடுமண்ணாலான பொருட்கள் அகழாய்வில் பெறப்பட்டுள்ளன. புதிய கற்காலத்தில் மக்களின் வாழ்க்கையில் வேளாண்மைக்குத் தேவையான இரும்பின் பயன்பாடும், நிலையான குடியிருப்புகளுக்கான இரும்பு ஆணிகளும் செம்பியன் கண்டியூரில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

    ஒளிப்படம்எடுத்தவர் - தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
    ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
    சுருக்கம் -

    நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் காவிரி ஆற்றின் வடகரையில் குத்தாலத்திலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் செம்பியன் கண்டியூர் என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. இவ்வூர் காவிரி ஆற்றின் கிளை நதியான விக்கிரமன் ஆற்றின் மேற்கரையில் அமைந்துள்ளது. எண்.52 வில்லிய நல்லூர் எனும் வருவாய் கிராமத்தின் உட்கிராமமாகத் தொன்றுதொட்டு வரலாற்றுச் சிறப்புடன் விளங்கி வருகிறது. செம்பியன் கண்டியூரின் கிடைத்த இரண்டு புதிய கற்காலத்தைச் சேர்ந்த கைக்கோடாரிகள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரால் ஆய்விற்கு கொண்டு வரப்பட்டன.  அந்த கைக்கோடாரியில் ஒன்றில் சிந்து சமவெளி நாகரிகத் தொடர்புடைய சித்திர எழுத்துக்கள் காணப்பட்டமை கண்டறியப்பட்டது. புதிய கற்கால கைக்கோடாரியில் இதுபோன்ற சித்திரக் குறியீடுகள் எங்கும் கிடைக்கவில்லை. இந்த புதிய கற்காலத்தைச் சேர்ந்த கைக்கோடரியில் காணப்படும் எழுத்துக்கள் தமிழ்-பிராமிக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. சிந்துவெளி எழுத்துக்களோடு தொடர்புடையதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    குறிப்புதவிகள் -

    1. சி.க.சிற்றம்பலம்,  பண்டைய தமிழகம், குமரன் புத்தக இல்லம், சென்னை, 1999.

    2. தமிழக அகழாய்வுகள் - செம்பியன் கண்டியூர் (2007-08), பொ.ப.ஆ. தி.ஸ்ரீ.ஸ்ரீதர், இ.ஆ.ப., தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை.